பெண்ணிடம் செல்போன் பறித்த 3 பேர் மீது வழக்கு


பெண்ணிடம் செல்போன் பறித்த 3 பேர் மீது வழக்கு
x

பெண்ணிடம் செல்போன் பறித்த 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை

மதுரை,

மதுரை ஊமச்சிக்குளம் அருகே உள்ள செம்மியனேந்தல் பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 40). சம்பவத்தன்று இவர் அழகர்கோவில் மெயின்ரோட்டில் செல்போன் பேசி கொண்டு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென்று கவிதா வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து அவர் திருப்பாலை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த 3 பேரை தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story