ஓய்வூதியர்கள் செல்போன் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பெற வசதி


ஓய்வூதியர்கள் செல்போன் மூலம்   மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பெற வசதி
x
திருப்பூர்


ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடி செல்போன் மூலமாக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

மின்னணு வாழ்நாள் சான்றிதழ்

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் இந்த ஆண்டு நேர்காணல் செய்வதற்கு மின்னணு வாழ்நாள் சான்றிதழ் மூலம் சமர்ப்பிக்கும் முறை கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வயது முதிர்ந்த மற்றும் கொரோனா தொற்று காரணமாக ஓய்வூதியர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை இன்னும் எளிமையாக வீட்டில் இருந்தே சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு செல்போன் மூலமாக சமர்ப்பிக்கும் முறை அனைத்து ஓய்வூதியர்களும் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

செல்போன் மூலம் சமர்ப்பிப்பதற்கு, ஆண்ட்ராய்டு செல்போன் வெர்ஷன் 7.0 மற்றும் அதற்கு மேல் வசதி கொண்ட செல்போன், இண்டர்நெட் இணைப்பு, ரேம் 4 பிளஸ் ஜி.பி., செல்போன் சேமிப்பு திறன் 64 ஜி.பி.யாகவும், கேமரா 5 எம்.பி. மற்றும் அதற்கு மேல் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். ஆதார் பேஸ் ஆர்.டி. என்ற செல்போன் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஜீவன் பிரமான் பேஸ் செயலியை https://jeevanpramaan.gov.inஎன்ற இணையதளத்தில் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பயனர் கையேடு

ஜீவன் பிரமான் 3.6.0 பேஸ் செயலி மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஆப்ரேட்டர் ஆதன்டிகேசன் (ஒருமுறை மட்டும்) பதிவு செய்து, பென்சனர் ஆதன்டிகேசன் மூலமாக தேவையான விவரங்களை பூர்த்தி செய்து வெளிச்சம் உள்ள இடத்தில் ஆண்ட்ராய்டு செல்போன் கேமரா மூலமாக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும்போது ஓய்வூதியர் கண்களை ஓரிருமுறை திறந்து மூடி எளிமையாக சமர்ப்பிக்கலாம்.

மேலும் இதுகுறித்த பயனர் கையேடு Jeevanpramaan-FaceApp-3.6-Installation.PDF மூலமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.


Next Story