புதிய சத்துணவு கட்டிட திறப்பு விழா
புதிய சத்துணவு கட்டிட திறப்பு விழா நடைபெற்றது
மதுரை
மதுரை
மதுரை மாநகராட்சி 29-வது வார்டு ஆழ்வார்புரம் பகுதியில் நீண்ட நாட்களாக குழந்தைகள் படிக்கும் சத்துணவு கூடம் இல்லாமல் குழந்தைகள் படிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.இந்த நிலையில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பூமிநாதன் எம்.எல்.ஏ.அந்த பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுத்து, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டுமான பணியை தொடங்கினார். தற்போது கட்டிடம் நிறைவடைந்து, நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேயர் இந்திராணி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் முகேஷ் சர்மா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story