கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வேதியியல் துறை பேரவை கூட்டம்


கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வேதியியல் துறை பேரவை கூட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வேதியியல் துறை பேரவை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வேதியியல் துறை பேரவை கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். வேதியியல் துறை மாணவ பேரவை மன்ற செயலாளர் ரித்திகா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக வள்ளியூர் பெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை தலைவர் ஆனந்தி கலந்து கொண்டு, "நானோ துகள்களின் தயாரிப்பு முறைகள், பண்புகள் மற்றும் அதன் நவீன பயன்பாடுகள்" என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர், பசுமை முறையில் நானோ துகள்கள் தயாரிக்கும் முறைகள், பண்புகள், அவற்றை எதிர்கொள்ளும் சவால்கள், அதன் நவீன பயன்பாடுகள் குறித்தும், மாணவிகள் எதிர்வரும் காலங்களில் கல்வித்துறை மட்டுமல்லாது ஆராய்ச்சி மற்றும் தொழில்துறையிலும் சிறந்து விளங்குவதற்குரிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியை மூன்றாம் ஆண்டு மாணவிகள் சிவசுந்தரி, ராபியா, மின்ஹா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இரண்டாம் ஆண்டு வேதியியல் பேரவை மாணவ செயலாளர் ஜெகன்யா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேதியியல் துறை தலைவர் கலைச்செல்வி, வேதியியல் பேரவை மன்ற செயலாளர் சந்திரா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story