சென்னை கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி

சென்னை கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்.
திருவண்ணாமலை,
சென்னை வில்லிவாக்கம், அன்னை சத்யா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சீனிவாசன் இவர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்குவளைவேடு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களான முத்துவேல்குமரன், கலைவாணன், கவியரசன், வேலாயுதம் ஆகியோருடன் கீழ்குவளைவேடு கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சீனிவாசன் தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக சிவா என்பவரின் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு சீனிவாசன் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். உடனடியாக இதுகுறித்து வந்தவாசி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேரம் போராடி சீனிவாசனை பிணமாக மீட்டனர்.