சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 16 அடி உயர கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.


சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 16 அடி உயர கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
x

சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் 16 அடி உயர கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சேலம்

முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

சேலம் மாநகராட்சி அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இந்த சிலை சுமார் ரூ.75 லட்சம் செலவில் 1,817 சதுரடி பரப்பளவில் 4 அடி உயரத்தில் பீடத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஸ்தம்பட்டி பயணியா் மாளிகையில் இருந்து செர்ரிரோடு, தமிழ்ச்சங்கம் வழியாக அண்ணா பூங்கா வந்தார். வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் தி.மு.க. தொண்டர்கள் நின்று வரவேற்பு அளித்தனர். காலை 9.50 மணி அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா பூங்கா வந்தடைந்தார். பின்னர் அண்ணா பூங்கா முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றவாறு ரிமோட் கண்ட்ேரால் மூலம் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மலர் தூவி மரியாதை

பின்னர் கருணாநிதி சிலை அருகே சென்று முதல்-அமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் முதல்-அமைச்சருக்கு சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வாளும், கேடயமும் பரிசாக வழங்கினார். சிலையை வடிவமைத்த சிற்பி தீனதயாளனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு பவுனில் மோதிரம் அணிவித்தார்.

மனுக்கள் பெற்றார்

தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை நோக்கி கை அசைத்தார். அவரை வாழ்த்தி தொண்டர்கள் கோஷமிட்டனர். முன்னதாக வரும் வழியில் முதல்-அமைச்சரிடம் பொதுமக்கள் சிலர் கோரிக்கை மனு கொடுத்தனர். அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று கொண்டார். அவர் வருகையையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கலந்து கொண்டவர்கள்...

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, மதிவேந்தன், கலெக்டர் கார்மேகம், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சின்ராஜ், பொன்.கவுதமசிகாமணி, மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி (மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு), மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர், துணைமேயர் சாரதா தேவி, மேற்கு மாவட்ட அவை தலைவர் தங்கமுத்து, துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், எலிசபெத்ராணி, பொருளாளர் பொன்னுசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பூவா என்கிற மணி, முருகேசன், ராமநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பழகன், தங்கமணி, ரவி, ஒன்றிய செயலாளர்கள் சின்னு என்கிற அர்த்தநாரீஸ்வரன், மிதுன் சக்கரவரத்தி, பாலகிருஷ்ணன், சீனிவாச பெருமாள், நல்லதம்பி, பரமசிவம், பச்சமுத்து, ராஜேஷ், நகர செயலாளர்கள் பாட்ஷா, காசி விஸ்வநாதன், குப்பு என்கிற குணசேகரன், செல்வம், கவுன்சிலர் சாந்தமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ரமேஷ்பாபு, சாரதிசீனிவாசன், எஸ்.பி.எல்.சிவக்குமார், மத்திய மாவட்ட அவைத்தலைவர் ஜி.கே.சுபாஷ், துணை செயலாளர் குமரவேல், செயற்குழு உறுப்பினர்கள் கே.டி.மணி, தாமரைக்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், குபேந்திரன், அமான் என்கிற நாசர்கான், மாநகர செயலாளர் ரகுபதி, மாநகர பகுதி செயலாளர்கள் பன்னீர்செல்வம், தனசேகரன், பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் மாணிக்கம், ரெயின்போ பி.நடராஜன், சேலம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி, ஊராட்சிமன்ற தலைவர்கள் ராஜா, கண்மணி, 23-வது வார்டு கவுன்சிலர் சிவகாமி அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story