கிறிஸ்தவ ஆலய திருவிழா


கிறிஸ்தவ ஆலய திருவிழா
x

தூய செபஸ்தியார் ஆலய திருவிழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை அருகே உள்ள ஜவகர்நகர் பணித்தளம், ஆயன்குளம் தூய செபஸ்தியார் ஆலயத்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடைபெற்றது. 28-ந் தேதி திருவிழா திருப்பலி, முதல் நற்கருணை பெருவிழா, அசன விருந்து, சப்பரபவனி நிகழ்ச்சிகள் நடந்தன. 29-ந் தேதி திருவிழா நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலய திருவிழாவில் புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் சி.முத்துக்குட்டி பாண்டியன் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராஜ் அடிகளார், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.


Next Story