கிறிஸ்துமஸ் பண்டிகை: தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு


கிறிஸ்துமஸ் பண்டிகை: தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்:  தெற்கு  ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Dec 2022 7:19 PM IST (Updated: 20 Dec 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது

சென்னை,

பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை ,தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது.வரும் டிசம்பர் 23 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06041) மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் செல்கிறது.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.


Next Story