உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் ஸ்ரேயா சிங் எச்சரிக்கை

உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் ஸ்ரேயா சிங் எச்சரிக்கை
உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் யாராவது தேசிய கொடி ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தின விழா
நாடு சுதந்திரம் அடைந்து 75-ம் ஆண்டினை கொண்டாடும் வகையில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா அனைத்து ஊராட்சிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சுதந்திரம் அடைந்ததன் பெருமிதத்தை அனைவரும் உணரும் வகையில் அனைத்து வீடுகளிலும் 3 நாட்கள் தேசிய கொடி ஏற்றி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று, அதாவது நாளை (திங்கட்கிழமை) அனைத்து ஊராட்சிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆகியோர் மட்டுமே தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்.
குற்றவியல் நடவடிக்கை
அவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள ஊராட்சி தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதை தடுக்கும் விதமாக செயல்பட்டால், அவர்கள் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை இருந்தால், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.