கடலூர் துறைமுகத்தில் இருந்து காரைக்காலுக்கு பாய்மர படகு சாகச பயணம் கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்


கடலூர் துறைமுகத்தில் இருந்து காரைக்காலுக்கு பாய்மர படகு சாகச பயணம் கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்
x

கடலூர் துறைமுகத்தில் இருந்து காரைக்காலுக்கு பாய்மர படகு சாகச பயணத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர்-5 தமிழ்நாடு தேசிய மாணவர் படையின் கப்பல் படை பிரிவு மற்றும் புதுவை-1 தேசிய மாணவர் கப்பல் படை மாணவர்கள் இணைந்து நடத்தும் கடல்சார் பாய்மரப்படகு சாகச பயணம் புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் காலை தொடங்கியது.

இந்த சாகச பயண குழுவினர் நேற்று முன்தினம் மாலை கடலூர் துறைமுகம் வந்தனர். பின்னர் கடலூர் துறைமுகத்தில் தங்கிய குழுவினரின் சாகச பயணத்தை மீண்டும் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், மாணவர்களின் இந்த சாகச பயணம், இடர்களை எதிர்கொள்ளும் திறன் வளர்த்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த திறன்கள் மாணவர்களை மென்மேலும் வளர்த்தெடுக்கும். இடர்பாடுகளை எதிர்கொள்ளும் மனநிலையை மாணவர்களிடம் தூண்டி மாணவர்களை சாதனையாளராக வளர்க்க பேருதவியாக இருக்கும் என்றார்.

302 கி.மீ. தூரம் பயணம்

இந்த பயணத்தில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் 3 பாய்மர படகில் 302 கி.மீ. தூரம் கடல் வழியாக சாகச பயணம் மேற்கொள்கின்றனர். அதாவது புதுச்சேரியில் பயணத்தை தொடங்கிய குழுவினர் பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் சென்று விட்டு மீண்டும் புதுச்சேரிக்கு திரும்புகின்றனர். இதில் லெப்டினன்ட் கமாண்டர்கள் லோகேஷ், கீர்த்தி நிரஞ்சன், சப் லெப்டினன்ட்டுகள் கோபிநாதன், மனோகரன், சீனிவாசன், சீனியர் மகேஸ்வரி, அதிகாரி ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story