பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் யூனியன் பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் யூனியன் பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் யூனியன் அலுவலகத்திற்கு ரூ.3.62 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வட்டார சுகாதார வளாக கட்டிடத்தையும் பார்வையிட்டார். திருப்புல்லாணி யூனியனில் திருப்புல்லாணி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.21 லட்சத்தில் திருப்புல்லாணி முஸ்லிம் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.9.10 லட்சத்தில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கும் பணி ஆகியற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அலுவலர்களுக்கு உத்தரவு

மேலும் இந்த பணிகளை விரைந்து முடித்து உரிய காலத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சேதுக்கரை ஊராட்சி, பிச்சாவலசை கிராமத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து தமிழக அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது குறித்தும், கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.


Next Story