கடையம் பகுதியில் கலெக்டர் ஆய்வு

கடையம் பகுதியில் கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
கடையம்:
கடையம் வட்டாரம் புலவனூர் கிராமத்தில் உள்ள துணை சுகாதார மையத்தில், வட்டார மருத்துவ அலுவலர் பழனிகுமார் மேற்பார்வையில் (ஐ.பி.வி.) பகுதியளவு செயலற்ற போலியோ தடுப்பூசி 9 மாதம் முடிந்த குழந்தைகளுக்கு கூடுதல் தடுப்பூசியாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம் சார்பில் மருத்துவர்கள் முகமது இப்ராகிம், குத்தாலராஜ், தேவிஉத்தமி, மோகினா, பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத், தாய் சேய் நல அலுவலர் கோமதி, நலக்கல்வியாளர் ஆறுமுகம், மாவட்ட புள்ளியலாளர் கார்த்திக் மற்றும் சுகாதார ஆய்வாளர் குயின்ஷீபா, சமுதாய சுகாதார செவிலியர் லீனாள்தேவி, பகுதி சுகாதார செவிலியர் பேபிசாந்தி, கிராம சுகாதார செவிலியர் பீமா பேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் செய்திருந்தார்.
மேலும் கீழக்கடையம், ரவணசமுத்திரம், சேர்வைக்காரன்பட்டி ஆகிய பகுதிகளில் நடக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். மாற்றுத்திறனாளி நடராஜன் என்பவர் நடத்தும் சைக்கிள் கடைக்கு சென்று அவரிடமும் பேசினார்.