தார் சாலை பணியை கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் நகரில் தார் சாலை பணியை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் நகரில் திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இ.எஸ். கார்டன் பகுதி வழியாக நகர பகுதிக்கு செல்லும் இடத்தில் நகராட்சி நிர்வாக பொது நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தார் சாலை பணியை தரமான முறையிலும், அதே நேரத்தில் விரைந்து முடிக்கும்படியும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, உதவி பொறியாளர் ராபர்ட், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story