உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் விஷ்ணு ஆய்வு


உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் விஷ்ணு ஆய்வு
x

வள்ளியூர் உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் விஷ்ணு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் விஷ்ணு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

வள்ளியூர் யூனியன் அலுவலகத்தில் மகளிர் திட்ட வாழ்வாதார சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைய அலுவலகத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின்பு வள்ளியூரில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் ரூ.98.70 லட்சம் மதிப்பீட்டில் உண்டு உறைவிட பள்ளி கட்டப்பட்டு உள்ளது. தற்போது இதில் மாணவ-மாணவிகள் தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர். இந்த உண்டு உறைவிட பள்ளியை கலெக்டர் விஷ்ணு நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

சுகாதார வசதி

ஆய்வின்போது உண்டு உறைவிட பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகள், மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை, சுகாதார வசதி, உணவு வழங்கும் முறை மற்றும் கல்வி பயிற்றுவிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, திட்ட இயக்குனர் பழனி, ராதாபுரம் தாசில்தார் யேசுராஜன், வள்ளியூர் யூனியன் ஆணையாளர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், வள்ளியூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் (பொறுப்பு) ஞானசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் கணேஷ்பாபு மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story