கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமிரியை அடுத்த பரதராமி கிராமத்தில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் கம்பம், மின் பாதை செல்லும் நிலங்கள், பயிர், மரம், கிணறு, ஆழ்துளை கிணறு, கட்டிடங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு தொகை வழங்க வேண்டும், உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை 2.45 சதவீதத்திற்கு பதில் 10 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர்.
அவர்களுடன் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தின் உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.