காதலன் கண் எதிரே கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை


காதலன் கண் எதிரே கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x

காதலனுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி கத்தி முனையில் மிரட்டி காதலன் கண் எதிரேயே கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த 19 வயது மாணவி, அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் மாணவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை காஞ்சீபுரத்தை அடுத்த குண்டுகுளம் வயல்வெளி பகுதியில் தனது காதலனுடன் மாணவி பேசிக்கொண்டிருந்தார்.

இதை நோட்டமிட்ட 4 பேர் கொண்ட கும்பல் அங்க திடீரென வந்தனர். பின்னர் அவர் கள் காதலர்கள் இருவரையும் கத்திமுனையில் மிரட்டி காதலன் கண் எதிரேயே கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

மேலும் இதை வெளியே சொன்னால் 2 பேரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவியின் காதலன், இதுபற்றி தனது உறவினரிடம் தெரிவித்தார். பின்னர் அவர் இதுபற்றி காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

4 பேரிடம் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், " தன்னை கூட்டுபலாத்காரம் செய்த 4 பேரும் முக கவசம் அணிந்திருந்ததால் அவர்களை சரியாக அடையாளம் தெரியவில்லை" என்றார்.

இதையடுத்து போலீசார், சம்பவம் தொடர்பாக செவிலிமேடு மேட்டு காலனியை சேர்ந்த ஊமை மணிகண்டன் (வயது 25), விப்பேடு விமல்குமார் (23), சிவக்குமார் (23), மரம் என்ற தென்னரசு (19) ஆகிய 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவியை காதலன் கண்முன்னே 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story