மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலிாயனார். மேலும் இந்த விபத்தில் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலிாயனார். மேலும் இந்த விபத்தில் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
நண்பர் பிறந்த நாள்
தஞ்சை மகர்நோன்புச்சாவடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 29). சம்பவத்தன்று இவர் அம்மாப்பேட்டையை சேர்ந்த நண்பரான செந்தில்குமாருடன் மோட்டார்சைக்கிளில் அய்யம்பேட்டையில் உள்ள நண்பர் ஒருவரது பிறந்தநாள் விழாவுக்கு சென்றார்.
பின்னர் பிறந்தநாள் நிகழ்ச்சியை முடித்து விட்டு மீண்டும் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தஞ்சை நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை செந்தில்குமார் ஓட்ட வெங்கடேஷ் பின்னால் அமர்ந்திருந்தார். மோட்டார்சைக்கிள் தஞ்சை அருகே மாரியம்மன்கோவில் புறவழிச்சாலை பகுதியில் வந்து கொண்டு இருந்தது.
வாலிபர் பலி
கடகடப்பை அருகே வந்த போது செந்தில்குமார் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்றுகொண்டிருந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் வெங்கடேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். செந்தில்குமார் பலத்த காயமடைந்தார்.இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலத்த காயமடைந்த செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
மேலும் இறந்த வெங்கடேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.