'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

எரியாத தெருவிளக்குகள்

குஜிலியம்பாறை தாலுகா பாளையம் அருகே உள்ள முத்தம்பட்டியில் கடந்த சில நாட்களாக ஒருசில தெருவிளக்குகள் எரியவில்லை. இரவில் அந்த பகுதிகள் இருளில் மூழ்கி விடுவதால், மக்கள் வெளியே நடமாடவே அச்சப்படுகின்றனர். அந்த தெருவிளக்குகளை சரிசெய்து எரிய வைக்க வேண்டும்.

-செல்வராஜ், முத்தம்பட்டி.

விளம்பர பேனர்கள் அகற்றப்படுமா?

வத்தலக்குண்டுவை அடுத்த பட்டிவீரன்பட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே விளம்பர பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ்பாபு, பட்டிவீரன்பட்டி.

கால்வாயில் இறைச்சி கழிவுகள்

உத்தமபாளையத்தில் சினிமா தியேட்டர் அருகே உள்ள கால்வாயில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் கால்வாய் பாழாகி வருவதோடு, அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் கால்வாயில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

-தமிழ், உத்தமபாளையம்.

உருக்குலைந்த சாலை

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்தில் இருந்து ரெட்டியபட்டிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து முற்றிலும் உருக்குலைந்து விட்டது. சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து பரவி கிடப்பதால் கிராம மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இங்கு புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.

-மாரியப்பன், தோட்டனூத்து.

தெருவிளக்கு வசதி தேவை

திண்டுக்கல்-மதுரை சாலையில் பேகம்பூரில் இருந்து தோமையார்புரம் வரை சாலையில் போதிய அளவில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் சாலையின் பெரும்பகுதி இருளில் மூழ்கி விடுகிறது. இது விபத்துகளை ஏற்படுத்தி விடுகிறது. எனவே கூடுதல் தெருவிளக்குகளை பொருத்த வேண்டும்.

-பொதுமக்கள், பேகம்பூர்.

சாக்கடை கால்வாய் வசதி தேவை

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே தர்மாபுரியில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தருவார்களா?

-பொதுமக்கள், தர்மாபுரி.

எரியாத சோடியம் விளக்கு

திண்டுக்கல் சந்தைரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே உள்ள சோடியம் தெருவிளக்கு எரியவில்லை. அந்த பகுதி இருளாக காட்சி அளிப்பதால் பெண்கள் நடமாடவே பயப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும்.

-ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.

வாரச்சந்தை பயன்பாட்டிற்கு வருமா?

தேவதானப்பட்டியில் புதன்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வாரச்சந்தையை மேம்படுத்தும் வகையில் கடந்த கடைகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் அந்த பணிகள் பாதியில் கிடப்பில் போடப்பட்டது. இதனால் வாரச்சந்தை இடநெருக்கடியுடன் நடைபெற்று வருகிறது. எனவே பணிகளை விரைந்து முடித்து வாரச்சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-மணிமாறன், தேவதானப்பட்டி.

சாலையை ஆக்கிரமித்த செடி, கொடிகள்

கடமலைக்குண்டு-குமணன்தொழு இடையேயான சாலையின் இரு ஓரங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கடமலைக்குண்டு.

-------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story