கல்லேரியில் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டதாக புகார்


கல்லேரியில் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டதாக புகார்
x
சேலம்

சங்ககிரி:-

சங்ககிரி அருகே இருகாலூர் ஊராட்சி செல்லப்பம்பட்டியில் கல்லேரி உள்ளது. சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் இந்த ஏரியில் மீன் பிடிக்க குத்தகை விடப்பட்டுள்ளது. இந்த மீன்களுக்கு கழிவு பொருட்கள் உணவாக வழங்கப்படுவதாகவும், இதனால் ஏரி நீர் மட்டுமின்றி சுற்று பகுதியில் உள்ள நீர் நிலைகளும் மாசுபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து சங்ககிரி உதவி கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில் குத்தகைதாரர் ஏரிகளில் கழிவுகளை கொட்டக்கூடாது என்றும், ஏரி மற்றும் அருகில் உள்ள விவசாய கிணறு ஆகியவற்றில் தண்ணீரை பரிசோதனை செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஏரியில் மீன்களுக்கு உணவுக்காக மீண்டும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சங்ககிரி ஒன்றிய ஆணையாளர் முத்துசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிராஜூதீன் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். அதன்ேபரில் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஏரியில் ஆய்வு செய்தனர். மேலும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதா? என தண்ணீரை பரிசோதித்தனர். அப்போது அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story