மேக்காமண்டபத்தில் காருடன் ரேஷன் அரிசி பறிமுதல்;டிரைவர் தப்பி ஓட்டம்

மேக்காமண்டபத்தில் காருடன் ரேஷன் அரிசி பறிமுதல்;டிரைவர் தப்பி ஓட்டம்
x

மேக்காமண்டபத்தில் காருடன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

கன்னியாகுமரி

தக்கலை,

மேக்காமண்டபத்தில் காருடன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

டிரைவர் தப்பி ஓட்டம்

தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து கொற்றிக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் ரசல் ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கேரள மாநில பதிவெண் கொண்ட சொகுசு காரில் ரேஷன் அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்த டிரைவரை போலீசார் பார்த்தனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து காரில் இருந்த 350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரினை பறிமுதல் செய்த போலீசார் அதனை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய டிைரவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story