சென்னை வருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே


சென்னை வருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
x

Image Courtesy: PTI

தினத்தந்தி 2 Feb 2024 5:10 AM GMT (Updated: 2 Feb 2024 5:30 AM GMT)

நாடாளுமன்ற தேர்தல் அலை நாடு முழுவதும் வீசத் தொடங்கி உள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் அலை நாடு முழுவதும் வீசத் தொடங்கி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் வகுப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.

இந்த நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருகிற 13-ம் தேதி சென்னை வருகிறார். சென்னை வரும் அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசின் தொகுதி பங்கீடு உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் இரு கட்சித் தலைவர்கள் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு இறுதியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகிற 9-ம் தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவுடன் காங்கிரஸ் கட்சி 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.


Next Story