கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு

பாவூர்சத்திரத்தில் கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு நடந்தது.
பாவூர்சத்திரம்:
தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் தென்காசி மாவட்ட மாநாடு, கீழப்பாவூர் பேரூராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் நெல்லை எஸ்.மகாலிங்கம் மாநாட்டை தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்ட தலைவர் துரைப்பாண்டி, மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். அமைப்புசாரா தொழிலாளர் வாரிய பொருளாளர் தங்கமாரி முன்னிலை வகித்தார். பூலாங்குளம் கிளை தலைவர் வேல்சாமி வரவேற்றார். மாநில சட்ட ஆலோசகர் சக்திவேல் தீர்மானங்களை வாசித்தார்.
கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், துணைத்தலைவர் ராஜசேகர் மற்றும் பலர் பேசினர். புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.