மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆலோசனை கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூர்
தோகைமலையில் உள்ள கருப்புகோவில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தோகைமலை கிளை சார்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கட்சி நிர்வாகி ஜீவானந்தம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், தோகைமலை ஒன்றிய செயலாளர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில், தோகைமலை கருப்புகோவில் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும், கருப்புகோவில் தெருவிற்கு கழிவுநீர் வடிகால் வசதிகள் அமைக்க வேண்டும், தோகைமலை ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் துரைராஜ், சண்முகம், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story