சூறாவளி காற்றில் குடிசை வீடு சேதம்


சூறாவளி காற்றில் குடிசை வீடு சேதம்
x
தினத்தந்தி 31 May 2023 12:30 AM IST (Updated: 31 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே சூறாவளி காற்றில் குடிசை வீடு சேதம் அடைந்தது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னம்மநாயக்கன்கோட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40). இவர் அப்பகுதியில் குடிசை வீடு அமைத்து, அதில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது சூறைக்காற்றில் சுப்பிரமணி வீட்டின் மேற்கூரை பறந்தது. இதனால் வீட்டில் இருந்த சுப்பிரமணியும், அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் அவரது வீடு இடிந்து விழுந்தது. முன்எச்சரிக்கையாக கணவன்-மனைவி 2 பேரும் வெளியேறியதால் உயிர்தப்பினர். மேலும் வீடு இடிந்ததால் அங்கிருந்த பொருட்கள் நாசமானது. இதேபோல் சூறாவளி காற்றில் நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story