மாட்டின் வாலை வெட்டிய தொழிலாளி கைது


தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாயர்புரம் அருகேமாட்டின் வாலை வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

சாயர்புரம்:

ஏரல் நாடார் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 47). இவரது மாடு கண்ணாண்டியன்விளை அருகே பாலன் என்பவருடைய தோட்டத்தில் புகந்து மேய்ந்து கொண்டிருந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த தோட்ட தொழிலாளியான வன்னியனூர் ஊரை சேர்ந்த வன்னியராஜா (65) என்பவர் மாட்டின் வாலை அரிவாளால் வெட்டி உள்ளார். இதை குறித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து வன்னியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story