இடிந்து விழும் நிலையில் உள்ள சீர்காழி வருவாய் ஆய்வாளர் அலுவலகம்


இடிந்து விழும் நிலையில் உள்ள சீர்காழி வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
x

இடிந்து விழும் நிலையில் உள்ள சீர்காழி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி;

இடிந்து விழும் நிலையில் உள்ள சீர்காழி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி இந்திரா நகரில் பழமையான வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த ஆய்வாளர் அலுவலக கட்டிடத்திற்கு உட்பட்ட சீர்காழி, கைவிளாச்சேரி, தாடாளன் கோவில், விளந்திட சமுத்திரம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, வடகால், கடவாசல், திருக்கருகாவூர், எடமணல், திருமுல்லைவாசல், ராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கிறார்கள்.

புதிய கட்டிடம்

இந்த வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் சேதமடைந்து மேற்பகுதி உள்ள சிமெண்ட் காரைகள் தினமும் பெயர்ந்து கீழே விழுந்த வண்ணம் உள்ளது. மேலும் எந்த நேரம் வேண்டுமானாலும் மேற்கூரை முழுவதும் இடிந்து கீழே விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படும் நிலையில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தினமும் அச்சத்தோடு வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கட்டிடம் கீழே விழுந்து உயிர் சேதம் ஏற்படுவதற்குள் மேற்கண்ட கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story