சேறும், சகதியுமாக காணப்படும் கூட்டுறவு அலுவலக சாலை
திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படும் கூட்டுறவு அலுவலக சாலையை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படும் கூட்டுறவு அலுவலக சாலையை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டுறவு துறை அலுவலகம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட விளையாட்டு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், வேளாண்மைத்துறை, வனத்துறை மற்றும் பல துறை அலுவலகங்கள் உள்ளன. இதில் அனைத்து துறை அலுவலகங்கள் செல்லும் சாலையும் தார் சாலையாக உள்ளது.இந்த வளாகத்தில் கூட்டுறவு துறை வளாகம் உள்ளது. இங்கு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், சரக துணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் கூட்டுறவு துறை அலுவலகங்களுக்கு பல்வேறு பணிக்காக வருபவர்கள், பயிற்சி நிலையத்தில் படிப்பவர்கள் என ஏராளமானோர் இங்கு வந்து செல்கிறார்கள்.
சீரமைக்க கோரிக்கை
இதில் கூட்டுறவு துறை வளாகம் பிரதான சாலையில் இருந்து சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் உள்ளே அலுவலக கட்டிடங்களுடன் உள்ளது.இங்குள்ள சாலை செங்கப்பி சாலையாக உள்ளது. இதனால் மழை பெய்யும் போது இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. கலெக்டர் அலுவலகத்திலே செங்கப்பி சாலையாக இந்த சாலை மட்டும் நீண்டகாலமாக இருந்து வருகிறது.தற்போது மழை காலம் என்பதால் பழுதடைந்த சாலையை கடப்பதற்கு வாகன ஒட்டிகள் மட்டுமின்றி, நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே கலெக்்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்த கூட்டுறவுத்துறை அலுவலகத்தக்கு செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்்கை விடுத்துள்ளனர்.