குடிநீர் தொட்டி பணிக்காக தோண்டிய பள்ளத்தால் ஆபத்து


குடிநீர் தொட்டி பணிக்காக தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
x

குடிநீர் தொட்டி பணிக்காக தோண்டிய பள்ளத்தால் ஆபத்து விரைந்து பணியை தொடங்க கோரிக்கை.

ராணிப்பேட்டை


வாலாஜா ஊராட்சி ஒன்றியம் செட்டித்தாங்கல் ஊராட்சி வ.உ.சி நகர் பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னர் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்கப்படாததால் பள்ளத்தில் மழை நீர் நிரம்பி நீச்சல் குளம் போல் காட்சியளிக்கின்றது. வயதானவர்கள் நடைபாதை அருகில் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். குழந்தைகள் அருகில் விளையாடுவதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே கட்டுமான பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story