மளிகை கடைக்காரர் சாவு; மகள் படுகாயம்


மளிகை கடைக்காரர் சாவு; மகள் படுகாயம்
x

தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் மளிகை கடைக்காரர் இறந்தார். அவரது மகள் படுகாயம் அடைந்தார்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் கும்பாரஅள்ளியை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். இவருடைய மகள் கோமதி (23). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக தனது தந்தை சரவணனுடன் தர்மபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு நல்லாம்பட்டி பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். கோமதி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story