கரும்பு ஆலை உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலி

பாலக்கோடு அருகே கரும்பு ஆலை உரிமையாளர் மின்சாரம் தாக்கி இறந்தார்.
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே பேளாரஅள்ளியை சேர்ந்தவர் சண்முகம் (வயது.45), இவர் சொந்தமாக வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலை வைத்துள்ளார். இந்த நிலையில் டிராக்டரில் ஆலைக்கு கரும்பு பாரம் வந்தது. டிராக்டரின் மேல் பகுதியில் நின்றபடி சண்முகம் கரும்பு கட்டுகளை இறக்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்சார கம்பியில் சண்முகத்தின் கை பட்டதால், அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story