மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு

மொரப்பூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார்.
தர்மபுரி
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள மருதிபட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 50). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மொரப்பூரில் இருந்து மருதிப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மொரப்பூர் அருகே உள்ள காமாட்சியம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராமலிங்கத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராமலிங்கம் படுகாயம் அடைந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் லேசான காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story