கச்சத்தீவை மீட்பது குறித்து பிரதமர், முதல்-அமைச்சரை சந்திக்க முடிவு-விவசாயிகள், மீனவர்கள் சங்க கூட்டுக் கூட்டத்தில் தீர்மானம்


கச்சத்தீவை மீட்பது குறித்து பிரதமர், முதல்-அமைச்சரை சந்திக்க முடிவு-விவசாயிகள், மீனவர்கள் சங்க கூட்டுக் கூட்டத்தில் தீர்மானம்
x

கச்சத்தீவை மீட்பது குறித்து பிரதமர் மற்றும் தமிழக முதல்- அமைச்சரை நேரில் சந்திக்க விவசாயிகள் மற்றும் மீனவர்கள் சங்கத்தின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

கச்சத்தீவை மீட்பது குறித்து பிரதமர் மற்றும் தமிழக முதல்- அமைச்சரை நேரில் சந்திக்க விவசாயிகள் மற்றும் மீனவர்கள் சங்கத்தின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டம்

ராமேசுவரம் துறைமுக கடற்கரையில் நேற்று விவசாயிகள் கூட்டமைப்பு, மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காவிரி, வைகை, கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் அர்ஜுனன், மாநில தலைவர் மிசாமாரிமுத்து மற்றும் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசூராஜா, போஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாநில செயலாளர் ராமன் முருகன், முகவை மாவட்ட செயலாளர் மலைச்சாமி, சிவகங்கை மாவட்ட செயலாளர் அய்யனார், விருதுநகர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மதுரை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவக்குமார், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த விவசாயிகளும், விசைப்படகு மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சகாயம், தேவதாஸ், எமரிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமரை சந்திக்க முடிவு

கூட்டத்தில் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும். கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளையும் உடனடியாக மீட்டு கொண்டுவர மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இலங்கை மீனவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கச்சத்தீவை மீட்பது குறித்து பிரதமர் மற்றும் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை மந்திரி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. முதல் முறையாக ராமேசுவரத்தில் விவசாயிகள் கூட்டமைப்பும், மீனவர்கள் கூட்டமைப்பும் இணைந்து கூட்டுக் கூட்டம் ஆலோசனை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story