தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில் தே.மு.தி.க. சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சின்னராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், ஓசூர் மாநகர செயலாளர் ராமசாமி ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஏழை, எளிய மக்களை பாதிக்கும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்த மத்திய அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில், மாநில வர்த்தக அணி தலைவர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் முருகன், வஜ்ரவேல், வல்லரசு, அப்பாபிள்ளை, மாவட்ட துணை செயலாளர் தங்கராசு மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story