தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
இந்திய தொழிற் சங்க மையம் (சி.ஐ.டி.யு.) சேலம் மாவட்டக்குழு சார்பில் 8 மணி நேர வேலை உரிமையை பறிக்கும் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கோவிந்தன், பொருளாளர் இளங்கோ, மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தொழிலாளர்கள் போராடி பெற்ற சட்டத்தை திருத்தக்கூடாது, அனைவருக்கும் 8 மணி நேர வேலையை உத்தரவாதம் படுத்த வேண்டும், 12 மணி நேரமாக வேலையை உயர்த்தக்கூடாது, தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story