பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் சேலம் மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பெரியசாமி வரவேற்றார். சிறப்புத்தலைவர் பாலசுப்பிரணியன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியின் போது மரணம் அடைந்த தினக்கூலி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வேண்டும். தகுதி உள்ள தினக்கூலி பணியாளர்கள் மற்றும் சிறப்பு கால முறை ஊதிய பணியாளர்களுக்கு இளநிலை பட்டு ஆய்வாளர் பதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் கணேசன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story