ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்


ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் தமிழக பழங்குடியினர் இளைஞர் அணி திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக ஆதிவாசிகள் அமைப்புகளின் கூட்டமைப்பின் மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் நடராஜன் வரவேற்றார்.

இதில் மாநில பொது செயலாளர் குணசேகரன், மாநில பொருளாளர் கஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் 2006 வன உரிமை சட்டத்தின்படி வன நிலங்களின் பயிர் செய்யும் ஜவ்வாதுமலை ஆதிவாசி மக்களை எக்காரணத்தை கொண்டும் வெளியேற்றக் கூடாது.

ஜி.பி.எஸ். சர்வே என்ற காரணத்தை காட்டி வனத்தில் பயிர் செய்யும் நிலங்களின் அளவை குறைத்து மிக குறைவான நில அளவு பட்டா கொடுப்பதை அரசு கைவிட வேண்டும்.

மலை பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்யும் ஆதிவாசி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இடைத்தரகர் மூலம் கொடுக்கும் வனஉரிமை மனுவை மட்டும் நடவடிக்கை எடுப்பதையும், இடைத்தரகர் மூலம் வன உரிமை பட்டா கொடுப்பதையும் விரைவில் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் ஆதிவாசி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story