கரும்பு வயலில் போடப்பட்ட சாராய ஊறல் அழிப்பு

கரும்பு வயலில் போடப்பட்ட சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
வாணாபுரம்
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் ஆகியோர் கொண்ட குழுவினர் மூஞ்சிராம்பட்டு பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது அங்குள்ள கரும்பு வயலில் சாராயம் ஊறல் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கரும்பு வயிலில் 10-க்கும் மேற்பட்ட பேரல்களில் சாராயம் ஊறல் போடப்பட்டு இருப்பதும், சாராயம் பாக்கெட் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் வடித்தட்டு, பானைகள் உள்ளிட்டவர்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து பேரல்களில் உள்ள சாராய ஊறலை அதே இடத்தில் கொட்டி அழித்தனர்.
மேலும் இதில் தொடர்புடையவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.