தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெருமாள்கோவில்பட்டி-அணைத்தலைப்பட்டி சாலை சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆதலால் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பைகள் அகற்றப்படுமா?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மெயின் பஜாரில் உள்ள அண்ணா சிலை அருகே குப்பைகள் அகற்றப்பட்டு பல நாட்களாகிறது. இதனால் இப்பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூர்வாரப்படாத கண்மாய்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி யூனியன் கே.வாகைகுளம் கிராமத்தில் உள்ள கண்மாய் மண் மேடேறி உள்ளது. இதனால் லேசான மழை பெய்தால் கூட கண்மாய் நிரம்பி தண்ணீர் வீணாக வெளியேறும் நிலை உள்ளது. பல வருடங்களாக தூர்வாரப்படாமல் உள்ள இந்த கண்மாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள் சிரமம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன காப்பகத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்ட கட்டணத்திற்கும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் அவசரத்திற்கு வாகனங்களை நிறுத்தவரும் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெயர் பலகை வேண்டும்தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் தபால் நிலையத்தில் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் இடம் தெரியாமல் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தபால் நிலையத்திற்கு பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.