சரக்கு ஆட்டோ மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம்

சாலை மேம்பாட்டு பணியின் போது குழாய் உடைந்ததால் சரக்கு ஆட்டோ மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
திருவாரூர்
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் பேரூராட்சிப் பகுதியான வெண்ணாறு பாலத்தில் இருந்து, அண்ணாசாலை வரை தார்ச்சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்ட பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் போது சாலையோரத்தில் உள்ள குடிநீர் குழாய்கள் உடைந்ததால் வீடுகளில் குடிநீர் வரவில்லை.இது தொடர்பாக பேரூராட்சி தலைவர் ராமராஜ் மற்றும் செயல் அலுவலர் கங்காதரன் ஆகியோரிடம் பொதுமக்கள், குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் பேரூராட்சி தலைவர் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு பேரூராட்சிக்கு சொந்தமாக சரக்கு ஆட்டோ மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story