தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்


தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
x

தேத்தாக்குடியில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

கரியாப்பட்டினம்:

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடியில் வேதாரண்யம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் இல.ஏகாம்பரம் தலைமை தாங்கினார். வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சதாசிவம் வரவேற்றார். மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவருமான கவுதமன் பேசினார். நகர செயலாளரும், நகர் மன்ற தலைவருமான மா.மீ.புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.கே.வேதரெத்தினம், காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் மறைமலை, மேற்கு ஒன்றிய செயலாளர் முருகையன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பழனியப்பன், உமா.செந்தாமரைச்செல்வன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகா.குமார், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி மாசு.செல்வம் நன்றி கூறினார்.


Next Story