மானை கடித்து குதறிய நாய்கள்

கொள்ளிடம் அருகே மானை நாய்கள் கடித்து குதறின. இந்த மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே மானை நாய்கள் கடித்து குதறின. இந்த மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.
மானை கடித்து குதறிய நாய்கள்
கொள்ளிடம் அருகே செங்கமேடு கிராமம் கொடிக்கால்வெளி தெருவில் நேற்று காலை ஒரு புள்ளி மானை நாய்கள் கடித்து கொண்டிருந்தன. பின்னர் அந்த மான் நாய்களிடம் இருந்து தப்பித்து அந்த பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டிற்குள் சென்று விட்டது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் வினோஷாகருணாகரன் அளித்த தகவலின் பேரில், சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையிலான பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, நாய்கள் கடித்து குதறியதில் காயத்துடன் இருந்த புள்ளி மானை மீட்டு சீர்காழியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சிகிச்சை அளித்து காட்டில் விட்டனர்
அங்கு கால்நடை டாக்டா் செல்லதுரை மருத்துவ உதவி அளித்ததைத் தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் புள்ளி மானை பாதுகாப்பாக காரில் எடுத்துச் சென்று கோடியக்கரையில் உள்ள சரணாலயத்தில் விட்டனர். கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் அதிக அளவில் மான்கள் உள்ளன. இதனை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.