திறந்தநிலையில் குடிநீர் வால்வு தொட்டி

திறந்தநிலையில் குடிநீர் வால்வு தொட்டி உள்ளதை சரி செய்ய வேண்டும்.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்ல குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் சேதமடையாமல் இருக்க வெம்பக்கோட்டை துணை மின் நிலையம், பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம், சத்திரப்பட்டி, வன மூர்த்திலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வால்வு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் வெளியேறும் தண்ணீர் தொட்டியில் நிறைந்து வெளியில் தேங்கியுள்ளது. வால்வு தொட்டியில் மூடி அமைக்கப்படாதால் தண்ணீர் அசுத்தம் அடையவாய்ப்புள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வால்வு தொட்டியில் மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story