மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலி

கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலியானார்.
கருங்கல்:
கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலியானார்.
கருங்கல் அருகே உள்ள உதயமார்த்தாண்டம் குற்றிப்பாறைவிளையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது32), டிரைவர். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உண்டு. குடும்ப தகராறு காரணமாக இவரைவிட்டு மனைவி மகனுடன் பிரிந்து சென்று தனது தாய் வீட்டில் தங்கி உள்ளனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கருங்கல்- தேங்காப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தார். தாளையங்கோட்டை பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுற்றுச்சுவரில் மோதியது. இதில் ராஜேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.