நாகலாபுரத்தில் கொட்டப்பட்டமருத்துவ கழிவுகள் அகற்றம்


நாகலாபுரத்தில் கொட்டப்பட்டமருத்துவ கழிவுகள் அகற்றம்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகலாபுரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே பனிக்கர்குளம் பஞ்சாயத்தை சேர்ந்த நாகலாபுரம் கிராமத்தில் சாலைஓரத்தில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்கள் மற்றும் மருந்து கழிவு பொருட்கள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு இருந்தன. இதுகுறித்து கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் கயத்தாறு போலீசார் அந்தபகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த கழிவு பொருட்களை பாதுகாப்பாக அகற்றி, அருகிலுள்ள இடத்தில் குழிதோண்டி புதைத்தனர். அடிக்கடி இந்த பகுதியில் மருத்துவ கழிகள் கொட்டப்பட்டுவருகிறது. இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story