மண் மூடிய கழிவுநீர் கால்வாய்

கொளப்பள்ளி டேன்டீயில் மண் மூடிய கழிவுநீர் கால்வாயை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பந்தலூர்
பந்தலூர் அருகே கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.2, பாலவாடி லைன்ஸ் பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அங்கு குடியிருப்புகளையொட்டி கழிவுநீர் இல்லாமல் இருந்தது. இதனால் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கியது. இதையடுத்து கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. முன்னதாக அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. அந்த மண் அகற்றப்படாததால், தற்போது கால்வாயில் மண் குவியல் கிடக்கிறது. இதனால் கால்வாயை மண் மூடி வருகிறது. இதன் காரணமாக கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதுதொடர்பாக தொழிலாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, போலீசார் வந்து சமாதனப்படுத்தினர். எனவே, கால்வாயை மூடி உள்ள மண்ணை அகற்றவும், மேல் மூடி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.