ஈசான உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா

ஆழ்வார்திருநகரியிலுள்ள ஈசான உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.
தூத்துக்குடி
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரியில் உள்ள ஈசான உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு அம்மனுக்கு மாக்காப்பு சாத்தப்பட்டு, சிறப்பு அலங்கார தீப ஆராதனை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை மற்றும் கணபதி ஹோமம் நடந்தது. காலை 9 மணிக்கு கோவிலிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதி வழியாக ஊர்வலமாக சென்று பகல் 12 மணிக்கு கோவிலுக்கு சென்றடைந்தனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. இரவு சாமக்கொடை நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story