கொள்ளையடித்த முதியவர் கைது

பட்டுக்கோட்டை பகுதியில் பல இடங்களில் கொள்ளையடித்த முதியவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் மேற்கண்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபரை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோரின் மேற்பார்வையில், பட்டுக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் அருண்குமார், இஸ்மாயில், தியாகராஜன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
கைது
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்கிற பழனியாண்டியை(வயது 70) ஒரத்தநாடு குலமங்களத்தில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டை பகுதியில் 5 வழிப்பறி வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றதும், இவர் மீது திருச்சிற்றம்பலம், திருவோணம் போலீஸ் நிலையத்திலும், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர் என்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த ஏப்ரல் மாதம் பட்டுக்கோட்டை பகுதியில் ஒரே நாள் இரவில் 4 வீடுகளில் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் தாலிச்சங்கிலியை அறுத்து சென்றதும் தெரிய வந்தது.
கொள்ளையடித்த நகை, பணத்தை ஒரத்தநாடு தாலுகா குலமங்கலம் கிராமத்தில் உள்ள சில நபர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக அவர் சொன்ன தகவலின்பேரில் திருட்டு போன நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தன