சாத்தான்குளத்தில் முதியவர் நூதன போராட்டம்

சாத்தான்குளத்தில் முதியவர் நூதன போராட்டம் நடத்தினார்.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகேயுள்ள தெற்கு அமுத்துன்னாங்குடியை சேர்ந்தவர் அர்ச்சுனை பாண்டியன் (வயது 63). இவர் தனது வீட்டு முன்பு பொதுப்பாதையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி நேற்று கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு, பட்டை நாமம் போட்டு கையில் கோரிக்கை அட்டையுடன் சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சிறிது நேரம் போராட்டம் நடத்தினார். பின்னர் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுக்க சென்றார். அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால், பெட்டியில் மனுவை போட்டுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இதனால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story