ஆசனூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றிய ஒற்றை யானை


ஆசனூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றிய ஒற்றை யானை
x

ஆசனூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றிய ஒற்றை யானை

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீரை தேடி கடந்த சில நாட்களாக யானைகள் ரோட்டில் வந்து சுற்றுகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு யானை ஆசனூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்தது. சிறிது நேரம் அங்குமிங்கும் உலாவிவிட்டு தானாக காட்டுக்குள் சென்றது. இந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.


Next Story