உதவி மின் பொறியாளர் பணியிடை நீக்கம்


உதவி மின் பொறியாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலத்தில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சில ஊர்களுக்கு மட்டும் மின் கணக்கீடு செய்ய போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால், 6-வது மாதத்தில் செலுத்திய மின் கட்டணத்தையே, 8-வது மாதத்தில் செலுத்தலாம் என்கிற தகவலை, வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் பிரேம்ராஜ் நாளிதழ் மூலம் அறிவித்தார். இந்த அறிவிப்பு முறையானது அல்ல என்பதை சுட்டிக்காட்டி, வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் பிரேம்ராஜை பணியிடை நீக்கம் செய்து மன்னார்குடி கோட்ட மின் செயற்பொறியாளர் மணிமாறன் உத்தரவிட்டார்.


Next Story